vanamseivom@gmail.com
044 4380 4084
Blog
Hydrocarbon Project
சமூக பிரச்சனைகள்

ஹைட்ரோகார்பன் திட்டம்

*இந்தியாவில் ஏன் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வர வேண்டும்?*

இந்தியா பயன்படுத்தும் எரிபொருளான பெட்ரோல், டீசல் ஆகியவற்றில்  80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தபடுகிறது. அதேபோல 45 சதவீதம் எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறார்கள்.

இதற்காக பெருமளவு பணமும் பொருளும் செலவு செய்ய வேண்டியது உள்ளது. மேலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் என்ற சூழ்நிலையும் இருக்கிறது. எனவே இந்தியாவிலேயே எரிபொருள் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

 

இதற்கு மாற்று ஏற்பாடாக தான் எரிபொருள்களை இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டங்களை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அதில் ஒன்று தான் ஹைட்ரோ கார்பன் திட்டம்.

 

*ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன?*

நாம் பயன்படுத்தும் பெட்ரோலிய பொருட்களில் ஹைட்ரஜனும், கார்பனும் கலந்துள்ளது. அவைதான் எரிபொருளாக பயன்படுத்தப்படுத்தபடுகிறது.

 

ஹைட்ரஜனும், கார்பனும் கலந்த பல்வேறு வகையான எரிபொருள் வாயுக்கள் பூமிக்கு அடியில் தேங்கி உள்ளன. அவை மீத்தேன், புரோபேன், பியூடேன், ஈத்தேன், பென்டேன் என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே  எரிபொருள்கள் ஆகும்.

 

அதாவது ஹைட்ரஜன் அணுக்களும், கார்பன் அணுக்களும் எந்த வகையில் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன என்பதன் அடிப்படையில் தான் எந்த வாயு என அறிய முடியும்.

 

எடுத்துகாட்டாக

4ஹைட்ரஜன் அணு + 1 கார்பன் அணு =மீத்தேன்.

 

 2 கார்பன்அணு + 6 ஹைட்ரஜன் அணு=ஈத்தேன்.

 

இவ்வாறு அணுக்கள் சேர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு எரிபொருளும் உள்ளன. நிலத்திற்கு அடியில் இந்த அனைத்து வகை எரிபொருள்களும் கலந்திருக்கின்றன. இவற்றை ஒட்டுமொத்தமாக ஹைட்ரோ கார்பன் என்று அழைக்கபடுகிறது.

 

 *தமிழ் நாட்டில் எங்கு ஹைட்ரோ கார்பன் உள்ளது?*

பூமிக்கு அடியில் இவைகள் பாறைகளின் இடுக்குகளில் ஆங்காங்கே ஏராளமாக தேங்கி நிற்கின்றன. இந்தியாவின் சில பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.

அவ்வாறு அதிகமாக காணப்படும் பகுதிகளில் தமிழ்நாடு ஒன்று. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் வரை அதிக அளவில் ஹைட்ரோ கார்பன்கள் பூமிக்கு அடியில் இருக்கின்றது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இவற்றை வெளியே எடுப்பதற்கு தான் இப்போது தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

நெடுவாசல் பகுதியில் தற்போது அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்  நான்கு ஏக்கர் நிலத்தில் இந்த ஹைட்ரோகார்பன்களை எடுப்பதற்குதான் திட்டங்கள் தீட்டபட்டு  வருகிறது.நெடுவாசல் தவிர இந்தியாவில்  30 இடங்களில்  ஹைட்ரோகார்பன் எடுக்க தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதானி வெல்ஸ்பன் எக்ஸ்ப்ளோரேஷன் மற்றும் ஜெம் லெபாரட்டரீஸ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே இவற்றை வெளியே எடுக்கும் பணிகளை மத்திய அரசுக்கு சொந்தமான .என்.ஜி.சி., ஆயில் இந்தியா நிறுவனங்கள் செய்து வந்தன. ஆனால் இந்த நிறுவனங்களால் பெருமளவு பணத்தை செலவிட்டு பணிகளை செய்ய வேண்டும் . அது முடியாத காரியம் என்பதால்  தனியாரிடம் இது கொடுக்கப்பட்டது.


*ஹைட்ரோ கார்பனை எவ்வாறு எடுக்க முடியும்?*

பூமிக்கு அடியில் 1000 மீட்டரில் இருந்து 5000 மீட்டர் ஆழம் வரை இவை படிந்திருக்கின்றன. அவற்றை தோண்டி எடுக்கவேண்டுமானால் பெரிய வடிவில் ஆழ்குழாய் கிணறு எடுக்க வேண்டும். செங்குத்தாகவும், கிடை மட்டமாகவும் இந்த கிணறு அமைக்கப்பட வேண்டும்.

அப்போது பாறை இடுக்குகளில் இருந்து ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் வெளியேறும். இதற்காக உள்ளுக்குள் தண்ணீர் அல்லது வாயுக்கள் மூலமாக அழுத்தம் கொடுக்கப்படும். அப்போது வெளியே வரும் வாயுக்களை கலன்களில் சேமித்து அவற்றை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்வார்கள். அங்கிருந்து தரமான ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கப்பட்டு அவை எரிபொருள்களாக பயன்படுத்தப்படும்.

 

பொதுவாக நமது நிலப்பரப்பில் மீத்தேன் வாயுதான் அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 90-லிருந்து 95 சதவீதம் வரை மீத்தேன் எளிதாக கிடைக்கும். இதற்காகத்தான் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள்.

1000 மீட்டரில் இருந்து 3000 மீட்டர் வரை ஆழ்துளை கிணறு தோண்ட உள்ளனர். அப்போது அங்கு தேங்கி இருக்கும் ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் வெளியேற தொடங்கும். அந்த இடுக்குகளில் நிலத்தடி நீர் சென்றுவிடும்.

முதலில் பூமியினுள் சுமார் 4000 அடி வரை துளையிடப்படுகிறது. பின் குறிப்பிட்ட ஆழத்தில் பாறையில் கிடைமட்டமாக துளையிடப்படுகிறது.   

 அதன் பின் ஃபிராக்கிங் (Fracking)  திரவம் அதிக திறனுள்ள விசை இயந்திரம் உதவியோடு பாறைகளினுள் பாய்ச்சப்படுகிறது. இந்த திரவத்திற்கு சுமார் 8 மில்லியன் லிட்டர் அளவிலான நீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவு நீரை சுமார் 65,000 பேர் பயன்படுத்த முடியும். அத்துடன் பல்லாயிரம் டன் மணல் மற்றும் 200,000 லிட்டர் இரசாயனங்கள் தேவைப்படுகிறது

 இவை பூமிக்கடியில் ஏற்படுத்தப்பட்ட துளையினுள் இருக்கும் பாறைகளில் ஊடுருவி அதிகளவிலான சிறுசிறு விரிசல்களை ஏற்படுத்துகிறது. மணல் இந்த விரிசல்களை மீண்டும் மூடாமல் பார்த்து கொள்கிறது.  

 

மேலும் இரசாயனங்கள் பல்வேறு பணிகளை பாறைகளில் மேற்கொள்கின்றன. மற்ற பணிகளை விட அவை நீரை சுருங்க செய்து, கிருமிகளை அழித்து, கனிம வளங்களை அழித்து விடும்


அடுத்து பெரும்பாலான இரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. இதன் பின் இயற்கை எரிவாயுவினை எடுக்க முடியும். இயற்கை எரிவாயுவினை முழுமையாக எடுத்துவிட்ட பின் பூமியினுள் இடப்பட்ட துளை முழுமையாக அடைக்கப்பட்டு விடுகிறது. இத்துடன் மீண்டும் இரசாயனங்கள் செலுத்தப்பட்டு அதன் மூலம் துளையடைக்கப்படுகிறது

 

இத்தனையும் மேற்கொள்ளப்பட்ட பின் ஃபிராக்கிங் வழிமுறை பல்வேறு இதர பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது

*ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் தீமைகள் என்ன?*

 

1)குடிநீர் மாசுப்படுத்தப்படுகிறது.

2)அதிகளவு சுத்தமான நீரை பயன்படுத்தபடுகிறது.

3)நீர் மாசுப்படுத்தப்படுத்தபடும்இவ்வாறு மாசுப்படுத்தப்படும் சுத்தமான குடிநீரை எவ்வித வழிமுறையை கொண்டும் சுத்திகரிக்க இயலாது.

4)நிலத்தடி நீர் இல்லாமல் போகும்.

 

உதாரணம்

 

தற்போது நிலத்தடி நீர் பூமிக்கு கீழே 100 மீட்டரில் இருந்து 400 மீட்டர் ஆழத்தில் இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டும்போது 1000 மீட்டரிலிருந்து 3000 மீட்டர் ஆழத்தில் ஏற்படும் வெற்றிடத்திற்குள் இந்த தண்ணீர் புகுந்துவிடும்.

அதாவது மேல்மட்டத்தில் உள்ள தண்ணீர் கீழ்மட்டத்திற்கு சென்றுவிடும்.

5)ஹைட்ரோ கார்பன் எடுக்கும் கிணறுகளில் இருந்து பெருமளவு உபயோக படுத்த முடியாத தண்ணீரையும் வெளியேற்றுவார்கள்.

இதனால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நிலத்தடி நீரே கிடைக்காத நிலை ஏற்படும். இதன் காரணமாக அந்த பகுதி விவசாயமே அழிந்து விடும் சூழல் உருவாகும்.

 

6)ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து பலவிதமான நச்சு வாயுக்கள் வெளியேறி காற்றில் கலந்து சுற்றுப்புற சூழலை முற்றிலும் நாசமாக்கிவிடும்.

7)மனிதன் மற்றும் அனைத்து உயிரினங்களின் உடல்நிலை பாதிப்பு ஏற்படும்

8)செடி, கொடி , மரங்கள் என அனைத்து இயற்கை வளங்களையும் நாசமாக்கிவிடும்.

 

*தீர்வு தான் என்ன?*

விவசாயம் செய்ய முடியாத பாலைவன பகுதி அல்லது மக்கள் அதிகம் பயன்படுத்தாத நிலங்களில் இந்த கிணறுகளை தோண்டினால் அதனால் பெரிய அளவில் பிரச்சினைகள் மற்றும் பாதிப்பு வராது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இவற்றை உருவாக்கும்போது அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை முன் வைக்கிறது.


 - காஞ்சி.கோகுல்குமார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்

Hydrocarbon Project

Why Hydrocarbon Project in India?

80% of petrol, diesel and 45% of the gas necessary for consumption in India is imported from abroad. Therefore, material and money in investments are humongous. The natural sources of fuel are getting depleted thereby production of fuel for our consumption has become a necessity.

As an initiative, the central government has started projects to produce fuel in India. One of those is the hydrocarbon project.

Where is hydrocarbon in Tamil Nadu?

Beneath the earth surface, they are abundant in the layers of rocks. They are found in some parts of India. In Tamil Nadu, between Villupuram district and the Pudukkottai district, large quantities of hydrocarbons have been identified.

Particularly at neduvasal, plans are afoot to excavate/acquire these hydrocarbons in multiple acres of land. Other than neduvasal, many other places in tamil nadu, have been identified as a source of hydrocarbon. The central government has also signed up with major companies including Adani Welspun Exploration and Gem Laboratories to extract hydrocarbon at 30 locations in India.

Central Government-owned ONGC and Oil India are already carrying out the extraction of hydrocarbon. As a consequence of insufficient investment and work progress, contract has been extended to private firms as mentioned above.

 

What is hydrocarbon?

Hydrogen and carbon form the composition in the petroleum products we use as fuel.

Various other forms of fuels are available beneath the earth surface. They are also named as methane, propane, butane, ethane, pentane. Each varies with different proportion of hydrogen and carbon.

For example:

4 Hydrogen atom + 1 carbon atom = methane.

2 carbon atom + 6 hydrogen atom = ethane.

As indicated above, each fuel is based upon atomic aggregation. These are collectively called hydrocarbons.

How to extract hydrocarbon?

Hydrocarbon sources are available within the range from 1000 m to 5000 m deep. A deep well should be set up both vertically and horizontally. Hydrocarbon gases emanate from the rock layers in the form of gas. The extracted gases are then stored in containers and transported to oil refineries. From there, standard hydrocarbon is extracted and used as fuels.

Usually methane gas is available in abundance within tamil nadu which is almost 90 to 95 percent compared to other forms of hydrocarbons.

 

Deep wells are dug from 1000 m to 3000 m. The hydrocarbon gases at that depth are stagnant and will begin to flow. Groundwater will seep within those layers.

At first, the drill is planned upto 4000 feet below the earth surface. The rock is then drilled horizontally at a specified depth. The fracking fluid then flows into the rocks with the help of a high-efficiency key engine. Approximately 8 million litres of water is used for this liquid which can be consumed by 65,000 people. Also, tons of sand and 200,000 litres of chemicals needed for this extraction process.

This extraction pressure penetrates the rocks beneath the earth surface and cause a large number of small cracks. The sand will keep these cracks from closing again. The rock beds beneath are subjected to chemical exposure. They compress water, disinfect, and destroy mineral resources. The next step is the extraction of natural gases. After the complete removal of natural gas, the hole in the earth is completely clogged. With this, the chemicals are again injected and drilled through it.

 

The fracking mechanism has various other vulnerabilities.

Disadvantages of hydrocarbon project?

1) Drinking water is contaminated.
2) Too much clean water is used.
3) Water is polluted. The contaminated drinking water cannot be cleaned by any means.
4) Groundwater goes dry.

For Example:

Groundwater is currently 100 to 100 meters below ground level. During the drilling procedure, the water enters the vacuum space created between 1000 meters to 3000 meters deep.

 

5) Hydro-carbon wells will also discharge contaminated water. This will result in ground water contamination and un-usability of ground water for agriculture and drinking. Over a period of time, it results in the destruction of the area\'s agriculture.

 

6) Toxic gases from hydrocarbon wells can be released into the air and completely destroy the environment.

7) Physical damage to man and all living things.

8) Destruction of other forms of nature such as plants, trees etc.

The solution?

It is concern if these hydrocarbon extraction projects are executed and installed in fertile lands. These projects are being executed in densely populated areas which is a life-threatening scenario for the local population.
The above said reasons are why we are putting up a strong opposition to the hydrocarbon project representing the Environmental Wing - Naam tamilar Katchi.

Moreover, there are many other sources for generating alternative forms of fuels instead on drilling.

- Kanchi.Gokul Kumar.

Environmental enthusiast