vanamseivom@gmail.com
044 4380 4084
Blog
Abduction of Agricultural Lands
சமூக பிரச்சனைகள்

பறிபோகும் விவசாய நிலங்கள்

இந்திய ஒன்றியத்தில் முதல் ஐந்தாண்டு திட்டத்தில் (அதாவது சுதந்திரம் கிடைத்த முதல் ஐந்தாண்டு) விவசாயத்திற்கு வழங்கப்பட்ட முதலீடு 15%. 2002-2007ல் வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்தது வெறும் 1.3%.50 வருடத்தில் 13.7% குறைத்து விட்டனர்.

மேலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை, வயல்வெளிகளில் கட்டப்பட்ட வீட்டுமனைகள் ஆகியவையும் விவசாயத்திற்கு ஒரு பெரும் சிக்கலாக உள்ளது.

முற்கால ஆட்சியில் பெரும் வருவாயாக நிலவரி இருந்தது. இதனால் விவசாயிகளுக்கும் சமூகத்தில் மரியாதை இருந்தது. இன்றைய இந்தியாவில் ஆட்சியின் வருவாய் வருமான வரி, தொழில் வரி, சுங்க வரி, விற்பனை வரி என்று வேறு தொழில்களிலிருந்து பெறப்படுகிறது.

விவசாய விளை நிலங்கள் இந்தியாவில் இன்றைய தலையாயப் பிரச்சனைகளில் ஒன்று.

 

 *விவசாய விளை நிலங்களின் ஆக்கிரமிப்பு*

அறிவியலும், தொழில் நுட்பமும் வளர்ந்ததால் , இன்று வழி வழியாக விவசாயத் தொழிலையே கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்த பல குடும்பங்களின் வாரிசுகள் அதனை விட்டு வேளியே வரத் துணிந்ததோடு அவ் விளை நிலங்களை  குடியிருப்புகளுக்காகவும், தொழிற்சாலைகளுக்கும் விற்று விட்டனர்.. மத்திய வேளாண் அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றின்படி, 2007-08 இருந்து 2010-11 வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் விவசாய சாகுபடிக்கான நிலப்பரப்பு 7,90,000 ஹெக்டேர் குறைந்திருக்கிறது. 2007ஆம் ஆண்டில் தேசிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் கொள்கை மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

 

அவை யாதெனில்

1)முடிந்தவரை விளைநிலங்கள் வேறு உபயோகங்களுக்காக மாற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும்;

2)பலதரப்பட்ட சாகுபடிகளையும் மேற்கொள்ளத்தக்க விதத்தில் பாசன வசதியுடன் கூடிய விளைநிலங்களின் பயன்பாடு மாற்றப்படக்கூடாது.

3)பாசன வசதியுடன் கூடிய விளைநிலங்களை அரசேகூடத் தனது சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் .

4)விவசாயம் என்பது மாநிலங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள உரிமை என்பதால், மத்திய அரசு வழிகாட்டத்தான் முடியுமே தவிர, மாநிலங்கள்தான் அதை செயல்படுத்தியாக வேண்டும்.

 

 *தமிழகத்தில் வேளாண்மை நிலை*

 

விவசாய நிலங்களின் அளவு 37.05 சதவீதமாக குறைந்துவிட்டது என்ற செய்தி தமிழக அரசின் 11வது ஐந்தாண்டு திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக விவசாயத்துறையில் இன்றைய நிலை குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 1993, 94ல் 25% இருந்த வேளாண்மை உற்பத்தி 2005, 2006ல் 13.03% சரிந்துள்ளது. அதே போல் 2001, 02ல் 76.89 லட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி 2004, 05ல் 61.40 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. தமிழகத்தில் , நெல் சாகுபடிக்கான விவசாய பரப்பளவு, 20,60,000 (2001-02) ஹெக்டேரிலிருந்து, 19,04,000 (2011-12) ஹெக்டேராகக் குறைந்து விட்டிருக்கிறது.


*நில பயன்பாட்டு கொள்கை*

நாட்டின் நிலவளத்தை அறிவியல்பூர்வமாகவும், மேம்பட்ட திறனுடனும் பயன்படுத்துவது, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் உணவுப்பாதுகாப்பை உத்தரவாதம் செய்வது, நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவது, இதுதான் இக்கொள்கையின் லட்சியம், குறிக்கோள்என்கிறது மத்திய அரசு.

 

விரைவுச் சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது.

 

 பி.ஜே.பி.யின் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டநிலம் கையகப்படுத்தும் சட்டம்’ 

1.விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு தரவேண்டியதில்லை. 2.நில உரிமையாளர்களிடம் அரசுத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறவேண்டியதில்லை.

என்று சொல்கிறது. தேசிய நிலப்பதிவுகள் திட்டத்தின் மூலம், நாட்டின் நில ஆவணங்கள் அனைத்தையும் தற்போது கணிணி மயமாக்கி வைத்துள்ளது மத்திய அரசு.

 

இந்நிலையில் வரவிருக்கும் நிலப்பயன்பாட்டுக் கொள்கையோ, மாநில அரசுகள் உருவாக்கி வைத்திருக்கும் நில நிர்வாகக் கட்டமைப்பு முழுவதையும், மத்திய அரசு கைப்பற்றிக் கொள்வதற்கு நேரடியாக வழியமைத்துக் கொடுப்பதாக இருக்கிறது.

 

ஒரு காலத்தில் நாம் ஐம்பது பைசாவிற்கு வாங்கி தின்ற குச்சி ஐஸ் இன்று வெண்ணிலா சாக்லேட் ஸ்டாபெரி சுவைகளுடன் 25 ரூபாய்க்கு விற்கின்றது. நாம் சாம்பாருக்கு பயன்படுத்தும் உருளைக்கிழங்கு இன்று பல சுவைகளில் நொறுக்குத் தீனியாக (chips , lays)  கடைகளில் விற்கப்படுகிறது.  குழந்தைகளின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும் வழக்கம் குக்கிராமங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. இத்தொழில்கள் அனைத்தும் தொடர வேண்டுமானால் வெண்ணிலா, கோதுமை, கடலை பயிறு ,சமையல் எண்ணெய் குறிப்பாக பாமாயில் ஆகியவற்றை விவசாயத்தில் கூடுதலாக உற்பத்தி செய்யவேண்டும். இவ்வாறு நாம் உணவுப்பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் இறுதியில் விவசாயத்தில் மாற்றம் ஏற்படுத்துவதில் வந்து முடிகிறது. இப்படி விவசாய உற்பத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த தனியார் நிறுவனங்கள் முயற்சி செய்து நில பயன்பாட்டு கொள்கையை தாங்களுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து நில வள சுரண்டலுக்கு வழி வகுக்கிறது

 

 

நில சுரண்டல் ஏற்பட்டால் நிலத்தை இழப்போம். நிலத்தை இழந்தால் இனத்தை இழப்போம்.

எதுவரை உன் மொழி நீள்கிறதோ அதுவரை உன் நிலம். அதுவரை உன் இனம். நிலமற்ற இனமும் உடையற்ற உடலும் மிகவும் அபாயகரமானது என்கிறார் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

 

- காஞ்சி.கோகுல்குமார்,

சுற்றுச்சூழல் ஆர்வலர்மேலும் தகவல்களுக்கு

1) https://ta.m.wikipedia.org/wiki/வேளாண்மை

 

2) http://lupm.urban-industrial.in/e65664/e66028/

Abduction of Agricultural Lands

In this country (a union of states by constitution), the investment for agriculture for the first five-year plan post-independence was 15%. But recently in between 2002-2007, the allocation to agriculture was just 1.3%.

In this recent 50-year period, they were down to 13.7%. Moreover, the arrival of foreign companies as industries in the name of special economic zones and real estate home – pre planned constructions within the natural vegetation locations are major concerns leading to the acquisition of agricultural lands.

In the past, the land was a great source of income earning the respect for farmers within the social structure.

In the economic structure of today\'s India, quite unfortunately, revenue is derived from as income tax, business tax, customs and sales tax as a by-product.

Acquisition of agricultural land. One of the major problems in India today.

 

Acquisition of agricultural land

With the development of science and technology, the past few generation of  agricultural fraternity sold the land for real estate and industrial development. According to a report from the Ministry of Agriculture, the total area under cultivation has declined by 7,90,000 hectares in the four years from 2007-08 to 2010-11. In 2007, the National Rehabilitation and Resettlement Policy was announced by the Federal Government.

 

It means,

1) To prevent possible conversion of farmland for other purposes.

2) The irrigated lands should not be altered to accommodate any other types of cultivation.

3) The government should avoid using irrigation-friendly lands for its own agenda.

 Since agriculture comes under the direct control of the states, the central government can only guide in this matter.

Agriculture - Status in Tamil Nadu

The report on the area of agricultural land has declined to 37.05 per cent in its annual report for the 11th Five Year Plan of the Government of Tamil Nadu. This is shocking information about the current state of Tamil Nadu agriculture. Agricultural production fell to 13.03% in 2005 and 2006 from 25% in 1993 and 94. Similarly, food grain production declined to 61.40 lakh tonnes in 2004-05 from 76.89 lakh tonnes in 2001-02. In Tamil Nadu, the area under paddy cultivation has declined from 20,60,000 hectares (2001-02) to 19,04,000 hectares (2011-12).

 

Land Acquisition act

The aim of this act is to use the country\'s land scientifically and efficiently, and also to guarantee the livelihood and food security of the people and ensure the sustainable economic development of the country.

The federal government has the authority to acquire land for the highways.

Land Acquisition Act introduced in BJP\'s previous regime

1. Farmers do not have to pay government compensation.

2. Government do not need the approval of Landowners for projects.

In this case, the impending land acquisition act would directly lead to the acquisition of the entire land management structure of the state governments.

The stick ice cream we once bought for fifty pennies today sells for Rs 25 with vanilla chocolate strawberry flavors. The potatoes we use for the sambar are now sold in many flavours as chips, lays. The custom of cutting the birthday cake of children is also happening all around.

In fact, for all these industries to survive, products like vanilla, wheat, seaweed, edible oils and especially palm oil need to be produced through agriculture. These changes in food habit ultimately generates the need to changes in agriculture (what we produce).

Based upon the business needs, private firms are trying to make a change in agricultural production by adapting their land use policy to so called the exploitation of land resource. This term “exploitation of land” means moving from our own traditional cultivation\'s.

When we lose our traditional cultivation, we are indirectly losing our lands.

 

Kanchi. Gokul kumar

Environmental Enthusiast


For more information:

1) https://ta.m.wikipedia.org/wiki/வேளாண்மை

2) http://lupm.urban-industrial.in/e65664/e66028/