கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து பிற உயிரினங்களுக்குப் பரவும் ஆபத்து இருப்பதை பல்வேறு நாடுகள் உறுதி செய்து வருகின்றன!
ஹாங்காங் நாட்டில் நாய்களுக்கும், பெல்ஜியம் நாட்டில் பூனைகளுக்கும் தற்போது அமெரி்க்க உயிரியல் பூங்காவில் புலிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அந்தந்த நாடுகள் கண்டறிந்துள்ளன!
இதனடிப்படையில் இந்திய அரசும் நாடு முழுவதுமுள்ள உயிரியல் பூங்காக்களை தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது!
சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியியல் பூங்காவிலும் அங்குள்ள உயிரினங்களுக்கு மனிதர்களால் நோய்த்தொற்று ஏற்படாது அவற்றைப் பாதுகாக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் பூங்கா நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருவதை செய்திகளில் அறிய முடிகிறது!
அரசு இத்தோடு நிறுத்தி விடாமல் வீடுகளில் வளர்க்கப்படும் உயிரினங்களுக்கு மனிதர்களிடமிருந்து கொரோனா தொற்று ஏற்படாதவாறு பாதுகாப்பது குறித்த விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்கி வெளியிட வேண்டும்! மக்களை அதனைக் கட்டாயம் பின்பற்றச் செய்ய வேண்டும்!
அதே போல் வனத்துறை அலுவலர்கள், வனப் பாதுகாவலர்கள் மற்றும் வனங்களுக்குள் செல்பவர்களால் அங்குள்ள உயிரினங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க தீவிரமான நடவடிக்கைகளை அரசு உடனே எடுத்திட வேண்டும்!
எனக்கு தெரிந்த சிலவற்றைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்..
1. வீடுகளில் உள்ளவர்கள் யாருக்கேனும் காய்ச்சல், இருமல் இருந்தாலோ அல்லது கொரோனா அறிகுறி இருந்தாலோ அதிலிருந்து குணமடையும் வரை அவர்கள் வளர்க்கும் உயிரினங்களிடருந்து விலகி இருக்க வேண்டும்.
2. வீட்டு விலங்குகளுக்கு இத்தொற்று பரவாமல் தடுக்கும் வண்ணம் அவற்றைப் பராமரிக்கும் வேளைகளில் ஈடுபடுபவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
3. கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் / உறுதியானவர்களின் வீடுகளில் உள்ள உயிரினங்களை நோய்த்தொற்றுக்கு ஆளாகாத பிற குடும்ப நபர்கள், உறவினர்கள் அல்லது நண்பர்கள் கவனித்துக் கொள்ளும்படி ஏற்பாடு செய்யலாம்.
4. வீடுகளில் வளர்க்கப்படும் உயிரினங்களுக்கு ஏதேனும் நோய்த்தொற்று அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக அவற்றை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று தகுந்த மருத்துவம் கட்டாயம் அளித்திடல் வேண்டும்.
5. வனப்பகுதிகளுக்குள் மனிதர்கள் நுழைவதை அரசு தீவிரமாகக் கண்காணித்து உள்ளே யாரும் நுழையா வண்ணம் தடுத்திடல் வேண்டும்.
6. வனப்பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ள வன அலுவலர்கள், வனப் பாதுகாவலர்கள், வன ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு. கொரோனா பரிசோதனையை உடனடியாக செய்திட வேண்டும்.
7. அதன் மூலம் அறிகுறி உள்ளவர்கள், தொற்று உறுதியானவர்களை வனப்பகுதியிலிருந்து தனிமைப்படுத்தி அவர்களுக்கான சிகிக்சைகளை அளிக்க வேண்டும்.
8. வனப்பகுதியில் பணியில் இருப்பவர்கள் தரமான முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
9. வரும் முன் காப்பதே சிறந்து மனிதர்களுக்கு.. ஆனால் வந்தாயிற்று..
10. இப்போது நம்மால் பிற உயிரினங்களுக்குப் பரவாமல் தடுப்பது, அவ்வுயிரினங்களைக் காப்பது நம் ஒவ்வொருவரது கடமை..
11.
வாயில்லா உயிர்கள் அல்லவா..
மனிதர்களிடமிருந்து தான் இந்த நோய் பிற உயிரினங்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளதேத் தவிர அவ்வாறு நோய்த்தொற்றுக்கு ஆளான உயிரினங்களிடமிருந்து ஏனைய பிற உயிரினங்களுக்கோ அல்லது மனிதர்களுக்கோ பரவ வாய்ப்பிருப்பதாக எந்த ஆய்வுகளும் இதுவரைக் கூறவில்லை!
விலங்குகளைத் தாக்கிய பிறகு இந்த வைரஸின் இயல்புத்தன்மை மாறிவிடுவதால் பெரும்பாலான ஆய்வுகள் அவ்வாறான பரவலுக்கு வாய்ப்பு இல்லை என்றே நிரூபிக்கின்றன. மேலும் இவ்வாறு தொற்றுக்கு ஆளான அத்தகைய உயிரினங்கள் பெரும்பாலும் எந்த ஒரு அறிகுறியையும் வெளிப்படுத்தவில்லை; குறிப்பாக தொற்றுக்கு ஆளான எதுவும் உயிரிழப்பைச் சந்திக்கவில்லை. அவைகளுக்கு உடலளவில் மிதமான பாதிப்பு அல்லது பாதிப்பே இல்லை என்கிற அளவிலேயே உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆகவே தேவையற்ற, அடிப்படை ஆதாரமில்லாத, எந்த ஒரு ஆய்வுகளும் சொல்லாத, நிரூபிக்காத உண்மைக்குப் புறம்பான செய்திகளை நம்பி வீடுகளில் வளர்க்கப்படும் உயிரினங்களை தெருக்களில் விட்டு விடாதீர்கள்! மூளையற்ற சங்கிகள் இதனைச் செய்ய வாய்ப்பிருக்கிறது! மூளையுள்ள நாம் அவர்களுக்கும் எடுத்துச் சொல்லி நம்மால் ஆபத்து நேர வாய்ப்புள்ள அந்த வாயில்லா சக உயிரினங்களைக் கண்ணும் கருத்துமாக பாதுகாப்போம்!
மனிதர்களின்றி பிற உயிரினங்கள் வாழும்.ஆனால் அவைகளின்றி மனிதர்களாகிய நாம் வாழ்வதற்குத் துளியும் வாய்ப்பில்லை.இந்த உயிரியல் சுழற்சி அடிப்படையைப் புரிந்து கொண்டு அறிவுள்ளவர்களாக பொறுப்புடன் செயல்படுவோம்..
- சரவணன்
சுற்றுச்சூழல் ஆர்வலர்
Saving other forms of lives from humans!
Various countries have confirmed the risk of
coronavirus spreading from humans to other organisms!
In Hong Kong, dogs and cats in Belgium have been
diagnosed with a coronavirus in the United States of America.
Accordingly, the Government of India has ordered
to monitor the zoos throughout the country.
There are reports that the park administration has taken various measures to protect the living creatures in the Vandalur Zoological Park in Chennai and to protect them from infection by humans!
The government must develop and publish comprehensive guidelines on how to protect the home-grown organism from coronaviruses without letting go! People must follow it!
As well as the Forest Officers, Forest Preservationists and Forest Conservationists, the Government must take drastic measures to protect the species from infection!
I\'m obligated to tell you something I know.
Anyone in the household should stay away from the
creatures they develop until they have a fever, cough, or coronary artery
disease.
Ensure
that domestic animals are wearing masks to prevent the spread of the disease to
domestic animals.
Organizations in the homes of people with coronary
artery disease / seizures may take care of other family members, relatives or
friends who are not infected.
In case of any infectious disease, domestic animals
should be taken to the veterinary hospital immediately and provided with
appropriate medical care.The government must actively monitor the entry of
humans into the wilderness and prevent anyone from entering. For forest
officers, forest guards and forest staff, who are hired in the forest. Corona
inspection should be made immediately.
It is
necessary to isolate the infected persons from the wilderness and provide them
with cigars.
Workers in the wilderness should be forced to wear
standard masks.
The best thing to do.
But the time has come.
Now it is our duty to protect our species from
spreading to other organisms
IMPORTANT: It is only in humans that the disease is at risk of spreading to other organisms.
Since the nature of the virus changes after the animal
has been attacked, most studies prove that it is unlikely to spread. Moreover,
such infected organisms often exhibit no symptoms; Nothing particularly
contagious has resulted in death. Studies have shown that they have no moderate
or negative impact on the body. So, don\'t leave homeless creatures on the streets,
relying on unnecessary, baseless, no-nonsense, unproven facts! Brainless
societies have the opportunity to do this! We, the brain, will tell them and
protect our harmless fellow creatures who are at risk!
All living creatures can exist without human beings.
But as human beings (?) We have no chance to live without them.
Understand the basics of this biological cycle and act responsibly
- Saravanan
Environmental Activist