vanamseivom@gmail.com
044 4380 4084
Blog
Suez Issue
நீர் சேமிப்பு

சுயஸ் பிரச்சினை

தண்ணீர் கேட்டு போராடிக்கொண்டிருந்த குடி மக்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசிக் கொண்டிருந்தன அரசுப் படைகள். இந்த நூற்றாண்டின் தொடக்கம் இப்படித்தான் இருந்தது, பொலிவிய (Bolivia) நாட்டின் கொக்கபாம்பா (Chocabamba) நகரத்தில். காரணம் தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டதும், அதை தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களும் தான். தண்ணீர் எங்கள் உரிமை என்ற முழக்கங்களுக்கு நடுவே பதினாறு பதினேழு வயது இளைஞர்களை நோக்கி தோட்டாக்களை பாய்ச்சிக் கொண்டிருந்த துப்பாக்கிகளின் ஒலி சற்று மெதுவாகத்தான் கேட்டது.

தண்ணீர் தனியார்மயம் ஆக்கப்பட்டதற்கான எதிர்வினைகள் பொலிவியாவில் இவ்வாறாக இருக்க, கோவையின் 24 மணி நேர குடிநீர் வினியோக உரிமை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. சூயஸ் (Suez) என்ற பிரெஞ்சு நிறுவனம் இதற்கான உரிமையை சுமார் 400 மில்லியன் யூரோவுக்கு (400 Million Euros) பிப்ரவரி 2018இல் கைப்பற்றியது. இந்த ஒப்பந்தம் ஒரு வருடம் சோதனை காலம், நான்கு வருடங்கள் கட்டுமான காலம் மற்றும் இருபத்தொரு வருட காலம் தண்ணீர் வினியோகிக்கும் உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு  வழங்குகிறது. 1,56,000 இணைப்புகள் தானியங்கி கட்டண இணைப்புகளாக (Automatic Metered Connections) நிறுவப்பட உள்ளன. ஒவ்வொரு இணைப்பிற்கும் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அதைத் தாண்டி தண்ணீர் பயன்படுத்துபவர்களுக்கு  அவர்கள் பயன்பாட்டிற்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கப்படும். 

இப்படியொரு திட்டத்தை கோவை மாநகராட்சி செயல்படுத்தாமல் தனியார் நிறுவனத்திற்கு, அதுவும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு உரிமத்தை ஏன் வழங்க வேண்டும்? என்பது முதல் கேள்வியாக எழுகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், மாநகராட்சி நிர்வாகமும் சீராக குடிநீர் வினியோகம் செய்துவரும் சூழலில் தண்ணீர் வளம்மிக்க கோவையில் குடிநீர் வினியோக உரிமத்தை தனியாருக்கு  கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நேரடியாக பதிலளிக்காமல், “24 மணி நேர குடிநீர் விநியோகத்திற்கான தொழில்நுட்பங்களை அறிந்த பொறியாளர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இல்லை\" என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார் கோவையின் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் .

கட்டண நிர்ணயம் குறித்த கேள்விக்கு, அப்போதைய சூழ்நிலை பொறுத்தே முடிவு எடுக்கப்படும். கட்டண நிர்ணயம் மாநகராட்சி இடம் தான் தொடரும் என்று நினைக்கிறேன் என்று குழப்பமான பதிலை தருகிறார் கோவை மாநகராட்சியின் ஆணையர் விஜய கார்த்திகேயன்.

ஆனால், சில மாற்றங்களுடன் குடிநீர் கட்டணத்தை சூயஸ் நிறுவனம் நிர்ணயித்துக் கொள்ளலாம். தேவை ஏற்பட்டால் குடிநீர் கட்டணத்தை உயர்த்தலாம் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் கட்டண நிர்ணய பொறுப்பை சூயஸ் நிறுவனமே ஏற்றுக் கொள்ளும் என்பது தெளிவாகிறது. மேலும், தற்போது உள்ள குடிநீர் இணைப்பு குழாய்கள் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மீண்டும் அமைக்கப்பட உள்ளன. ஆக, புது இணைப்பு பெறுவதற்கான செலவையும் மக்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், “முதன்மை சேவை நீர்த்தேக்கங்களில் இருந்து வீட்டு சேவை இணைப்புகள் வரை ஒட்டுமொத்த நீர் வினியோக வலையமைப்புக் கூறுகளை இயக்குதல் மற்றும் பராமரிப்பதற்கு நிறுவனமே பொறுப்பாகும்”, என்ற வரி ஒப்பந்தத்தில் உள்ளது. இதன் மூலம் எந்த எல்லை வரை வேண்டுமானாலும் தன் கட்டுப்பாட்டை சூயஸ் நிறுவனம் விரிவு படுத்திக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த திட்டம் குறித்த செய்திகள் வெளிவந்த உடனேயே, பல்வேறு எதிர்ப்பு குரல்கள் ஒலித்தன. ஆனால், இந்த திட்டத்துக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்று அரசு அறிவித்தது. சூயஸ் நிறுவனம் கோவைக்கு வந்தால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்று யாரோ ஒருவர் தயாரித்த காணொளியை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததற்காக கோவையைச் சேர்ந்த அப்துல்ரசாக் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். திட்டம் செயல்படுத்தப்படும் முன்பே இவ்வளவு கொடுமையான சர்வாதிகார போக்குடன் அரசும் மாநகராட்சியும் செயல்படுவதை பார்க்கும் போதே, திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு எதிர்ப்பு குரல்கள் எழுந்தால், தீவிர அடக்குமுறைகள் கையாளப்படும் என்பது தெளிவாகிறது.

1990 களின் தொடக்கத்தில், லத்தீன் அமெரிக்காவில் தண்ணீர் தனியார்மயமாக்கம் தொடங்கியது. பின்னர் அது உலகெங்கும் உள்ள பிற வளரும் நாடுகளுக்கும் பரவியது. வளர்ந்து வரும் நாடுகளில் நீர் தனியார்மயமாக்குதலுக்கான காரணம் தனியார் துறை வளர்ச்சிக்கு உதவும் வகையில் அரசாங்கங்களுடன் கட்டமைப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்த, உலக வங்கி (World Bank) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) தலையீடு அதிகரித்ததே காரணமாகும்.


தண்ணீர் தனியார்மயம் ஆக்கப்படதற்கு எதிரான போராட்டங்களுக்கு புகழ்பெற்றது பொலிவியா.   தனியார்மயம் மற்றும் உலகமய கொள்கைகளை கொண்ட உலக வங்கியின் அறிவுறுத்தலின் படி, பொலிவிய நாட்டின் நகரமான கொக்கபாம்பா (Chocabamba)வின் நீர் வினியோக உரிமையை சன்பிரான்சிஸ்கோ (San Francisco)வை சார்ந்த பெச்டெல்(Bechtel) என்ற நிறுவனத்தின் கிளை நிறுவனம்   (Aguas del Tunari)  கைப்பற்றியது. பொறுப்பேற்ற பின் தண்ணீர் கட்டணங்களை ஒரு மாதத்திற்கு சராசரியாக 35% வரை உயர்த்தியது. ஆனால், அந்த நகரத்தில் உணவுக்காக கூட அவ்வளவு தொகையை மக்கள் செலவு செய்யும் பொருளாதார நிலை இல்லை. இந்த நிலையை பொருட்படுத்தாமல், \"மக்கள் தங்கள் குடிநீர் கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் அவர்களுடைய தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படும்\" என்று அந்த நிறுவனம் அறிவித்தது.

 

இதன் விளைவாக, 2000-ஆம் ஆண்டு சனவரி, பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் பல்லாயிரக்கணக்கானோர் அணிவகுத்து தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்கள் கொக்கபாம்பா நீர் யுத்தங்கள் (Chocabamba Water Wars) என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த போராட்டங்களின் போது, 6 பேர் கொல்லப்பட்டதுடன், 175க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறுதியாக, ஏப்ரல் 10, 2000 அன்று தேசிய அரசாங்கம் தனியார்மயமாக்குதலை திரும்ப பெறுவதாக அறிவித்தது.  அதோடு வெளியேறாத அந்த நிறுவனம் - தாமாக வெளியேறவில்லை என்றும், கட்டாயமாக வெளியேற்றப்படுவதால், 40,000,000 டாலர்கள் தங்களுக்கு இழப்பீடாக பொலிவியா அரசு வழங்க வேண்டும் என்றும் கோரியது. 

2000 ல் பொலிவியாவில் நடைபெற்ற நீர் தனியார்மயமாகுதலுக்கு எதிரான போராட்டங்களுக்கு பின்னர், தனியார்மயமாக்கல் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உலக வங்கி பரிந்துரைத்த தனியார்மயமாக்கல் மாதிரி, பியூனஸ் அயர்ஸ்(அர்ஜென்டினா) – (Buenos Aires - Argentina), தார் ஏஸ் சலாம் (தான்சானியா) – (Dar es Salaam - Tanzania), கிரெனோபிள் (பிரான்ஸ்) – (Grenoble - France), மெட்ரோ மணிலா (பிலிப்பைன்ஸ்) - (Metro Manila - Philippines), கொண்கொபே (தென்னாபிரிக்கா) -  (Nkonkobe - South Africa), அட்லாண்டா (அமெரிக்கா) – (Atlanta - USA),போன்ற பல நாடுகளில் தோல்வியடைய தொடங்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவில், கட்டணம் செலுத்த இயலாத ஆயிரக்கணக்கானோர் தங்கள் இணைப்புகளை துண்டித்துள்ளனர். 

மணிலாவில் (Manila), முதல் பத்தாண்டுகளுக்கு கட்டணம் அதிகரிக்காது என்று உறுதி அளித்த பின்னரும் கூட, தனியார்மயமாக்கபட்டு மூன்று ஆண்டுகளுக்குள் 700 சதவீதம் தண்ணீர் கட்டணங்கள் உயர்ந்தன. தென் ஆப்பிரிக்காவில் தண்ணீர் கட்டணங்கள் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டன. கட்டணம் செலுத்த இயலாத ஏழைகளின்  குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தண்ணீர் வாங்குவதற்காக சில நேரம் உணவையும் தவிர்த்த அவர்கள், மாசுபட்ட தண்ணீரை அருந்தியதால் காலரா நோயும் பரவ தொடங்கியது. 

இந்தியாவை பொறுத்தவரை, தேசிய நீர் கொள்கை (National Water Policy - NWP), 2012 குடிநீர் சேவைகளை வழங்குவதற்கு தனியார் துறை பங்கேற்பை ஒரு மாற்றாக பரிந்துரைக்கிறது. இது உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) மற்றும் சர்வதேச நிதிக் கழகம் (International Finance Corporation) போன்ற பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் தண்ணீர் தனியார் மயமாக்கும் முயற்சிகளின் எதிரொலி ஆகும். இந்தியாவிலும் சில இடங்களில் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், எதுவும் வெற்றி அடையவில்லை. டெல்லி, மும்பை, பெங்களூர்,  லதூர், மைசூர் ஆகிய இடங்களில் மக்கள் அழுத்தத்தின் காரணமாக இந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டன. 

2012ல், நாக்பூரில் பா.. தலைமையிலான நகராட்சி அமைப்பு, தனது குடிநீர் விநியோகத்தை, வீலியா (Veolia) என்ற  பிரெஞ்சு துணை நிறுவனத்திடம், 25 ஆண்டுகளுக்கு ஒப்படைத்தது. அப்போது முதல் ஊழல் குற்றச்சாட்டுக்கள், நான்கு மடங்கு கட்டண உயர்வு என தொடர்ந்து எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றது. தனியார் நிறுவனத்தை வெளியேற்ற கோரி எதிர்க் கட்சிகளும், உள்ளூர் மக்களும் கோரிக்கைகள முன்வைத்து வருகின்றனர். 

டெல்லியில் தண்ணீர் தனியார்மய திட்டம் அறிவிக்கப்பட்ட, 2005 காலங்கள் முதலே அதை எதிர்த்து டெல்லி வாசிகள் போராடி வருகின்றனர். நவம்பர் 2011இல் ஏராளமான , தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், \"தண்ணீர் தனியார்மயமாக்கம்-வர்த்தகமயமாக்கல் எதிர்ப்புக் குழு\" என்ற குழுவின் கீழ், 2010 முதல் டெல்லி ஜல் போர்டு (DJB) விதித்த கட்டணங்களை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்தொடர் எதிர்ப்புகள் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. 

முன்னாள் காங்கிரஸ் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் (Vilasrao Deshmukh), மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரின் (Latur) குடிநீர் சேவைகளை ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்தார். ஆனால் சில ஆண்டுகளுக்குள்,  நீரின் தரத்தில் எவ்வித முன்னேற்றமும் இன்றி, மிக அதிக கட்டணம் வசூலித்ததால் எழுந்த போராட்டங்கள் காரணமாக, அத்திட்டத்தை திரும்ப பெற்றார். 

345 கி.மீ. நீளமுள்ள சிவ்நாத்(Shivnath) நதி, மகாநதியின் மிகப்பெரிய கிளைநதி ஆகும். சட்டீஸ்கர் மாநிலம், துர்க் (Durg) மாவட்டத்தில் பாயும் இந்த சிவ்நாத் நதியின் ஒரு பகுதியின் (23.5 கி. மீ.) உரிமை, தனியார் நிறுவனமான  ரேடியஸ் வாட்டர் லிமிடெட் (Radius Water Limited - RWL)க்கு விற்கப்பட்டது. 1998ல், போராய் (Borai) தொழிற்சாலைப் பகுதிக்கு 22 ஆண்டுகளுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை இந்த நிறுவனத்திற்கு அரசு வழங்கியது. 

அப்போதிருந்து, ஆற்றின் இருபுறமும் வேலிகள் அமைக்கப்பட்டு, கரையில் உள்ள கிராம மக்கள்,மீன் பிடிக்கவும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் ஆற்று நீரை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. துர்க் மாவட்டத்தின் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஆற்றையே நம்பியிருந்தன - 80% நீர் பாசனத்திற்கும், 20% மீனுக்கும். தண்ணீர் தட்டுப்பாடு மக்களிடையே மோதலை ஏற்படுத்தியது, யாரிடம் முறையிட வேண்டும் என்றும் அவர்களுக்கு புரியவில்லை. 

பொது  உரிமை பிரச்னைகளுக்காக பணியாற்றிய நாடி-கேதி மோர்ச்சா (Nadi-Ghati Morcha) என்ற இயக்கம் போராடத் தொடங்கியது. நீர் தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ததோடு, அரசு ஒப்பந்தத்தை அகற்ற வேண்டும் என்றும் கோரியது. இறுதியாக, 2007 இல் அரசாங்கம், சிவ்நாத் தனியார்மயமாக்கம் பற்றி விசாரிக்க பொதுக் கணக்குக் குழுவை (Public Accounts Committee - PAC) அமைத்தது. இதன் விளைவாக, சிவ்நாத்திலிருந்து பாசனத்திற்கும் பிற நோக்கங்களுக்காகவும் கிராம மக்களை தண்ணிர் எடுக்க அனுமதிக்க   வேண்டிய கட்டாயத்திற்கு RWL நிறுவனம் தள்ளப்பட்டது. 

ஆக, போராய் (Borai) தொழிற்பேட்டைக்கு நீர் வழங்குவதற்காக சிவ்நாத் (Shivnath) நதி தனியார்மயமாக்கம், சத்திஸ்காரில் துர்க்; மத்தியப் பிரதேசத்தில் கந்த்வா மற்றும் சிவபுரி (Khandwa and Shivpuri); மகாராஷ்டிரத்தில்  லாதூர், நாக்பூர், அவுரங்காபாத் (Latur, Nagpur and Aurangabad); கர்நாடகாவின் மைசூர், ஹூப்ளி-தார்வாட் மற்றும் பெங்களூர் (Mysore, Hubli-Dharwad and Bangalore) என இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து தனியார்மய திட்டங்களும் தீவிரமான சமூக, பொருளாதார, நிதி மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொண்டு, தோல்வியில் முடிந்தன. 

சூயஸ் நிறுவனத்தை பொறுத்தவரை, பொலிவியாவில் லா பாஸ் - எல் ஆல்டோ (La Paz - El Alto), நகரங்களுக்கு நீர் வினியோக உரிமத்தை கைப்பற்றியது. அந்த நகர மக்களின் ஆண்டு வருவாய் சராசரியாக 750 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், சூயஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம்  (Aguas del Illimani) பொறுப்பேற்ற உடன், குடிநீர்  இணைப்பு கட்டணத்தை, ஆண்டுக்கு 445 அமெரிக்க டாலர்களாக உயர்த்தியது 

இதைத்தொடர்ந்து, சனவரி 2005இல், கொக்கபாம்பா நீர் யுத்தத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவை ஒட்டி, பாசெனோஸ்  (Pazenos) மற்றும் பக்கத்து நகரமான எல் ஆல்டோவின் (El Alto) மக்கள் திரண்டு, மூன்று நாள் வேலைநிறுத்தம் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டனர். கொக்கபாம்பா நிகழ்வுகளை மீண்டும் தவிர்க்கும் பொருட்டு, பொலிவிய அரசாங்கம் சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது. 

தென் ஆப்ரிக்காவில் நீர் வினியோக உரிமைகளை கைப்பற்றிய சூயஸ், கறுப்பு தென் ஆப்ரிக்க மக்களின் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு, வெள்ளை சிறுபான்மையினருக்கு சுத்தமான நீரை வழங்கியது. வெள்ளையர்களைவிட கறுப்பின மக்களுக்கான சேவைகள், தரம் குறைந்ததாகவும், அதிக கட்டணமும் வசூலிக்கப்பட்டது. இதன் விளைவாக நிறவெறி எதிர்ப்பு அமைப்புக்கள் - சேவை கட்டண புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தன. தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களுக்கு பின் இந்த திட்டமும் கைவிடப்பட்டது. ஆக, சமூக ஏற்ற தாழ்வுகளை தூண்டும் வகையிலும் சூயஸ் நிறுவனம் செயல்பட்டுள்ளது.

2014 ஆய்வின் படி, கடந்த 15 ஆண்டுகளில், பாரிஸ், பேர்லின், ப்யூனஸ் அயர்ஸ், புடாபெஸ்ட், கோலாலம்பூர் (Paris, Berlin, Buenos Aires, Budapest, Kuala Lumpur) போன்ற முக்கிய நகரங்கள் உட்பட, 180 இடங்களில் அரசாங்கங்கள் தண்ணீர் கட்டுப்பாட்டை தனியார் நிறுவனங்களிடம் இருந்து  திரும்பப் பெற்றுள்ளன. இதில், 75% நிகழ்வுகள் அதிக வருமானம் பெறும் நாடுகளிலும், 44 நிகழ்வுகள்

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளிலும் நடைபெற்றுள்ளது. அனைத்து 180 இடங்களிலும், ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படவில்லை அல்லது ஒப்பந்த காலம் முடியும் முன் ரத்து செய்யப்பட்டன. 

உலகளவில், நீர் தனியார் மயமாக்க அனுபவங்களை எடுத்துக் கொண்டால் , எங்கும் அது நீண்ட காலம் நீடித்ததில்லை. எனவே, தண்ணீர் உரிமை தனியார்மயமாக்கம் என்பது தோல்வியுற்ற மாதிரி என்பது தெளிவாகிறது. வாழ்க்கையின் அடிப்படைத் தேவை மறறும் மனித உரிமையாக  ஐக்கிய நாடுகள் சபை (. நா.) நீர் தேவையை அங்கீகரித்துள்ளது. மாறாக, தனியார் நிறுவனங்கள் லாபம் பெருக்குதல் என்ற ஒற்றை நோக்கத்துடன் தான் செயல்படுகின்றன. ஆனால், நீர் வழங்கல் நிர்வாகம் என்பது , உரிமைகள் மற்றும் அடிப்படைத் தேவை சார்ந்த விடயம் ஆகும். எனவே, நீரைப் பண்டமாக பார்க்கும் எந்த முயற்சியும், எதிர்மறையான விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும்.

கோவையில் குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது முதல், நாம் தமிழர் கட்சி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. மேலும், மேற்கூறப்பட்ட தண்ணீர் தனியார்மயமாக்கத்தின் பாதகங்களை முன்வைத்து, மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது. குடிநீரை சந்தைப்படுத்தி,  விற்பனை செய்வதை மானுட சமூகத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் செய்யும் பச்சைத் துரோகமாக நாம் தமிழர் கட்சி கருதுகிறது. மேலும், “தூய குடிநீரை அரசே மக்களுக்கு இலவசமாக வழங்கும். அனைத்து உயிர்களுக்கும் நீர் தேவையை நாம் தமிழர் அரசு உறுதி செய்யும்எனவும் தன் செயல்பாட்டு வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நீர்வளப் பெருக்கம் மற்றும் நீர் மேலாண்மை கொள்கைகள் மற்றும் திட்டங்களையும் தெளிவுபடுத்தி உள்ளது.

Suez Issue

Government forces were shooting tear gas grenades at the people protesting in demand of water. Such was the beginning of this century in the city of Cochabamba, Bolivia. The cause was the privatization of water and the protests that followed it. Amid the slogan, \"water is our right,\" the sound of guns firing bullets at sixteen and seventeen-year-olds was heard only slightly.


While these were the opposing reactions to the privatization of water in Bolivia, the right to supply drinking water 24-hours a day has been handed over to a private corporation in Coimbatore. Suez, a French company, acquired the rights for 400 Million Euros in February 2018. The agreement grants Suez a one-year trial period, four years of construction time, and twenty-one years of water distribution rights. Over 1,56,000 connections are to be installed as automatic metered connections. A minimum flat fee will be charged up to a set usage limit for each link, and those who use water beyond that will be charged additional fees based to their usage.

The first question is, \"Why would Coimbatore municipality not implement such a scheme and grant the license to a private company, especially a foreign one\"? When the reporters questioned Prakash, Municipal Administration Commissioner, \"What is the necessity to grant the water distribution rights to a private corporation while Tamil Nadu Water Supply and Drainage Board (TWAD) and the corporation is steadily supplying water in a water-rich Coimbatore?\", he gave an irrelevant and irresponsible answer that TWAD does not have engineers with the knowledge of 24-hour water supply technology. 

While answering a question regarding the tariff, Vijay Karthikeyan, the Commissioner of Coimbatore Corporation, gave a confusing answer - \"The decision will be made based on the circumstances. I think the corporation will continue to set the tariff \", but as per the agreement, Suez can set the tariff with some changes and raise the water rates if the need arises. Thus, it is clear that Suez will be responsible for future tariffs. Besides, existing drinking water pipes are to be rebuilt for a distance of one thousand kilometers. Therefore, people will have to bear the cost of a new connection. 

Also, a point in the agreement states that the company is responsible for operating and maintaining the entire water distribution network, from primary service reservoirs to home service connections. It is worth noting that this will allow Suez to expand its control to any extent. 

Immediately after the release of the news about this project, various voices erupted in protest. The government announced that slanderers of the scheme would be arrested immediately. Police arrested Abdulrazak from Coimbatore for sharing a video on his Facebook page that someone created to depict the aftermath of Suez\'s entry into Coimbatore. As we can see, the government and the municipal corporation are acting with such a brutal dictatorial tendency even before the plan is implemented. It becomes clear that after the implementation, any voice of opposition will be handled with severe oppression. 

In the early 1990s, water privatization began in Latin America. It then spread to other developing countries around the world. The reason for the privatization of water in developing countries is the increased involvement of the World Bank and the International Monetary Fund to formulate structural contracts with governments to facilitate private sector growth. 

Bolivia is famous for its struggles against water privatization. At the behest of the World Bank, whose policy is privatization and globalization, the water distribution rights of the Bolivian city of Cochabamba was acquired by Aguas del Tunari, a subsidiary of San Francisco based Bechtel. After taking charge, water charges were raised monthly by 35% on an average. The city\'s economy was such that even people did not spend so much on food. Regardless of the situation, the company announced, \"If people don\'t pay for their drinking water, their water connection will be cut-off.\" 

As a result, tens of thousands of people marched and staged a series of protests in January, February, and April 2000. These struggles are referred to as the Cochabamba Water Wars. During these protests, six people were killed and over 175 wounded. Finally, on April 10, 2000, the national government announced the withdrawal of privatization. The company refused to exit and filed a lawsuit against the Bolivian government, claiming that they were forced to quit and demanded a compensation of $40,000,000.  

After the struggles against water privatization in Bolivia in 2000, the anti-privatization protests have continued. World Bank recommended privatization model has started to fail in countries like Buenos Aires - Argentina, Dar es Salaam (Tanzania), Grenoble (France), Metro Manila (Philippines), Nkonkobe (South Africa) and Atlanta (USA). In South Africa, thousands of people who cannot afford to pay have cut their connections. 

In Manila, even after promising not to increase fees in the first decade, water charges rose by 700 percent within three years after privatization. Water charges have tripled in South Africa. The drinking water lines of the poor who could not pay were cut-off. They also avoided food for some time to buy water, and Cholera started to spread since they began to drink contaminated water.

 As for India, the National Water Policy (NWP-2012) recommends private sector participation as an alternative to the provision of drinking water services. This is a reflection of the efforts of various international corporations, such as the World Bank, the Asian Development Bank, and the International Finance Corporation, to privatize water. Attempts have been made to privatize water in India, but nothing has been successful. The plans were canceled due to popular pressure in Delhi, Mumbai, Bangalore, Latur, and Mysore. 

In 2012, the BJP-led municipal body in Nagpur handed over its drinking water to a French subsidiary, Veolia, for 25 years. Since then, it has been facing objections due to the protests against the corruption scandal and fourfold tariff hike. Opposition parties and the local people have been demanding the exit of the private company. 

Delhi residents have been fighting against the water privatization plan since 2005 when it was announced. In November 2011, a large number of workers, lawyers, and activists, under the association \"Water Privatisation-Commercialization Resistance Committee,\" started the protest demanding the withdrawal of fees imposed since 2010 by the Delhi Jal Board (DJB). The project was abandoned due to repeated protests. 

Former Congress chief minister Vilasrao Deshmukh handed over drinking water services to a private company in Latur, Maharashtra. Within a few years, the project was withdrawn due to protests caused by overcharging without any improvement in water quality. 

345 km long Shivnath River, is the largest tributary of the Mahanadi River. The right of a part of the Shivnath River (23.5km), which flows in the Durg district of Chhattisgarh State, was sold to Radius Water Limited – RWL. In 1998, the government granted the company the right to supply the drinking water to the Borai factory area for 22 years. 

Since then, fences were erected on either side of the river, and the villagers were not allowed to use the river water for fishing or any other purpose. More than 1000 families in the Durg district relied on the river for their livelihood - 80% for irrigation and 20% for fish. Water scarcity triggered conflict among the people, and they did not understand whom to appeal to. 

Nadi-Ghati Morcha, a movement for civil rights issues, began to protest. They campaigned against the water privatization program and demanded that the government withdraw the contract. Finally, in 2007, the government set up the Public Accounts Committee (PAC) to investigate the privatization of Shivnath. As a result, RWL was forced to allow the water from Shivnath to villagers for irrigation and other useful purposes. 

Therefore, the privatization of the Shivnath River to supply water to the Borai industrial park, Durg in Chhattisgarh; Khandwa and Shivpuri in Madhya Pradesh; Latur, Nagpur and Aurangabad in Maharashtra; Mysore, Hubli-Dharwad and Bangalore in Karnataka and all other privatization schemes launched in India have faced serious social, economic, financial and environmental problems and failed. 

As for Suez, it seized the water distribution license for the cities La Paz and El Alto in Bolivia. When the average annual income of the city\'s population was $750, after taking in charge, Suez\'s subsidiary Aguas del Illimani increased the water rates to $445 per year. 

Following this, in January 2005, on the fifth anniversary of the Cochabamba Water War, the people of Pazenos and the neighboring city El Alto rallied and carried out a three-day strike and siege. Bolivian government canceled the deal with Suez to avoid repeating Cochabamba events. 

Suez, who seized water rights in South Africa, ignored the needs of the black South African population and provided clean water to the white minority. Services for black people were lower and more expensive than for whites. As a result, anti-apartheid organizations called for a boycott of service tariffs. The project was abandoned after a series of protests. Thus, Suez acted in a manner that provoked social inequality. 

According to a 2014 survey, in the last 15 years, governments have withdrawn water control from private companies in 180 places, including major cities such as Paris, Berlin, Buenos Aires, Budapest, and Kuala Lumpur. 75% of these were in high-income countries, and 44 occurrences in middle and low-income countries. In all 180 locations, contracts were not renewed or canceled before expiration.

 Based on the extensive worldwide experience of the privatization of water, it is evident that it didn\'t last for a long time, and privatization of water rights is a failed model. The United Nations (UN) has recognized the need for water as a human right and the basic necessity of life. On the contrary, private companies serve the sole purpose of profit maximization, but water management is a matter of rights and basic needs. Therefore, any attempt to view water as a commodity will only have negative consequences. 

Since the granting of the right to supply water in Coimbatore to Suez, fierce opposition is being registered by the Naam Tamilar party. Moreover, it has been continuously raising public awareness based on the aforementioned ills of water privatization. The Naam Tamilar party considers the marketing and sale of drinking water as a pure betrayal not only to human society but to all living beings. Moreover, Naam Tamilar\'s government will provide pure drinking water to the people free of charge. It will ensure to fulfill the water needs of all lives, as noted in the Naam Tamilar Party\'s governance policy draft. It has also clarified plans to increase water resource and water management policies.