vanamseivom@gmail.com
044 4380 4084
About Us
3500+ தன்னார்வத் தொண்டர்கள்
மக்கள் பணியில் 2018 ஆம் ஆண்டு முதல்!!

எங்களின் முதன்மை நோக்கம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மரம் வளர்ப்பு மற்றும் நீரை சேமிப்பது ஆகும்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு நாம் தமிழர் கட்சியினால் உருவாக்கப்பட்ட அமைப்பு இதுவாகும். பல இளைஞர்கள் தாமாகவே முன் வந்து தன்னார்வத் தொண்டர்களாக இணைந்து பசுமை புரட்சியை உருவாக்க பாடுபடுகின்றனர்.
எங்களின் முதன்மை பணிகள்
  1. ஆறுகள், குளங்கள், குட்டைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி, கரைகளை வலுப்படுத்துதல். நீர்வழிதடங்கள் சீரமைப்பு மற்றும் மீட்டுருவாக்கம்.
  2. சுற்றுச்சூழலை அதிக அளவில் மாசுபடுத்தும் நெகிழி மற்றும் குழைமம் ஒழிப்பு, அதற்கு மாற்றாக இலை, சணல், காகித, துணி பைகள் ஊக்குவிப்பு.
  3. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்படுத்தப்பட்ட மற்றும் எதிர்கால திட்டங்களுக்கு எதிரான சட்டப் போராட்டம் மற்றும் போராடும் மக்களுக்கு துணை நிற்றல்.
  4. உயிற்சூழல், பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக நாட்டு மரங்களை இயன்ற இடங்களில் நட்டு, பராமரித்தல் - பொதுமக்களை பராமரிக்க செய்தல்.
  1. சுற்றுச்சூழல் மாசு, உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் மற்றும் அதற்கான செயல்திட்டங்கள் குறித்து மக்களிடையே விழப்புணர்வை ஏற்படுத்துதல்.
  2. பல கோடி பனை மரங்களை நீர்நிலைகளை சுற்றி நட்டு வளர்ப்பதன் மூலம் கரைகளை வலிமை படுத்துதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல்.
  3. நிலத்தடி நீர் சத்தையும், சுற்றி இருக்கும் காற்றில் உள்ள நீர் சத்தையும் உறிஞ்சி மண் வளத்தை நீர்த்துப்போகச் செய்யும் சீமை கருவேல மரங்களை முற்றும் முழுதாக அழித்தல்.
  4. நம் பாரம்பரிய நாட்டுமரம் மற்றும் காய்கறி நெல் விதைகளை பாதுகாத்தல்.
வனம் செய்வோம்

உலக சூழலியல் அரசியலை பகுத்தாய்வு செய்து, நம் மண்ணின் இயற்கை வளங்களை காக்கவும், பல்லுயிர் நலனுக்காகவும், நீரின் இன்றியமையாமையையும் , சூழலியலுக்கு எதிராக நடக்கும் அரசு பயங்கரவாத்தையும், எளிய மக்களின் புரிதலுக்கு எடுத்து சொல்லும் தனித்துவமான அரசியல் ஆசானாக விளங்கி வருகிறார் அண்ணன் சீமான்.

வோட்டரசியலுக்காக உலக வரலாறு பேசும் தலைவர்கள் மலிந்திருக்கும் இந்நாட்டில், அனைத்து உயிர்களுக்குமான உலக சூழலியல் அரசியலை முன்வைத்து ஒவ்வொரு மேடையிலும் முழங்கி வருகின்றனர் நம் பேச்சாளர்கள்.

"மூன்றாம் உலகப்போர் ஒன்று வருமேயானால் அது தண்ணீருக்காக மட்டும் தான்" என்ற கூற்றை உலக சூழலியல் வல்லுனர்களும், இயற்கை ஆராய்ச்சியலார்களும் சமீப காலமாக எச்சரித்து வருகின்றனர். இந்தக் கூற்றை பத்து ஆண்டுகாலமாக ஒவ்வொரு மேடையிலும் நாம் தமிழர் கட்சி பேசியிருக்கிறது.

தேர்தல் முடிந்தவுடன், பிற கட்சியினருக்கு வேலை முடிந்துவிடும். ஆனால் நாம் தமிழர் கட்சியினர் மரம் நட சென்று விடுவார்கள் என்று பரவலாக (நகைச்சுவையாகவும்) அறியப்படும் வகையில் நம் செயல்பாடுகள் இருந்து வருகிறது.

பன்னாட்டு கார்ப்பெரேட் நிறுவனங்களும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் அரசுகளும்:

உலக பொருளாதரச் சந்தையில் லாபத்திற்காக மட்டும் உருவாக்கப்பட்டுள்ள, முதலாளித்துவத்தின் முக்கிய கோட்பாடாக இருப்பது 'உலகமயாமதல்'. இயற்கைக்கும் மனிதக் குலத்திற்கும் எதிரான இயற்கையை குறிவைத்து நடத்தப்படும் பல்முனைத் தாக்குதல்களை நடத்தும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, கையில் கொடுக்கப்படும் 'துருப்புச்சீட்டு' உலகமயமாதலும், அதற்கு இயைந்து கொடுக்கும் பொருளாதார அரசியல் சட்டங்களும்.

சூழலியல் அரசியல் இயக்கத்தின் செயல்முறை:

மரம் நடுவதற்கு ஆயிரமாயிரம் இயற்கை தன்னார்வல நிறுவனங்களும், தனிமனித விழிப்புணர்வும் நம் மண்ணில் அதிகரித்து விட்டது. ஆனால் இயக்கமாக, வளர்ந்து வரும் அரசியல் அமைப்பின் அங்கமாக இருக்கும் நம் சுற்றுச்சூழல் பாசறையின் செயல்பாடுகள், நம் மண்ணில் பெருகி வரும் சூழலியல் ஆபத்துகளுக்கும் அச்சுறுத்தலுகளுக்கும் எதிராக போராடும் ஒரு சமூக அமைப்பாக உருமாற அவசியமாகிறது.

இயற்கைகெதிராக இயக்கப்பெற்ற இந்திய அரசின் அரசியல் சட்டங்களையும், அதனை பயன்படுத்தி இயற்கை வளக்கொள்ளையையும், இயற்கை நியதிகளாம் பல்லுயிர் பெருக்கத்தையும், மற்றும் தனித்திறல் வாழ்வுடைய உயிரியற் பல்வகைமையும் (self sustained biodiversity) எதிராக விளங்கும் மனிதனுக்கும் மட்டும் பயன் தரும் நுகர்வோர் கலாச்சாரத்தை பெருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் ('வளர்ச்சி' என்றப் பெயரில்), நம் மண்ணின் மீது நடத்துவது சூழலியலுக்கெதிரான மறைமுக பனிப்போர்.

இச்சூழலில் இயற்கை ஆர்வலரின் தேவையை விட இயற்கைப் போராளியின் தேவை அதிகரித்து விட்டது. இயற்கையுடன் நிற்க ஆயுதமெடுக்கும் காலம் வெகுத்தொலைவில் இல்லை. நாம் ஏந்தியுள்ளது அன்பாயுதமும் அறிவாயதமும்.

Vanam Seivom

In Indian political history, the Naam Tamil Katchi has a distinctive and unique structure that no other political party owns.

To analyze the politics of global ecology/environment, to protect the natural resources of our soil, the biodiversity and the necessity of water, and to educate about the government's environmental terrorism, our elder brother Seeman has been a remarkable political mentor for the common people. In this country, amongst the political leaders who operate towards vote politics, our (Naam Tamilar Katchi) speakers are propagandizing, the politics of global ecology for all beings on earth.

"If there was a Third World War, it will be for water". This claim has been recently warned by global ecologists and natural researchers. We have articulated on every platform for over ten years.

The Naam Tamilar Katchi has been promoting and working towards protecting natural resources, biodiversity, implementing organic agriculture methods, growth and maintenance of palm trees, improving and educating about groundwater storage, facilitating rainwater harvesting, global warming prevention, augmentation/maintenance of indigenous vegetation, creating awareness about natural science theories, protecting endangered natural resources and all forms of life. Naam Tamilar Katchi is not only for humans, but it is also for all forms of life.

Naam Tamilar Katchi cadres, go and plant trees after elections. While other political parties believe that its job done and move on to their daily routine. Naam Tamilar Katchi believes in predicting and forecasting the scenarios about the future and make steady work today to ensure safer socio-economical and environmental living conditions of our people.

Multinational corporate companies establish puppet governments created the world economy market, as a profit-making business, one of the main tenets of capitalism is 'globalization'. For multinational corporations that carry out multidisciplinary attacks targeting nature and humanity, the 'trump card' is globalization and the economic and political laws that support it.

The process of ecological political movement initiated by Vanam Seivom team of Naam Tamilar Party, widely differs from individual awareness campaigns for planting trees to preserve our natural resources, by NGOs and activists. As a enviro-political movement, the activities of our environmental wing, comprises an integral part of our Naam Tamilar Katchi's serves as a catalyst to increase our goodwill amongst the general voter populace . Also, there is a necessity to transform our own society into a social organization that will fight against the growing ecological risks and threats.

The policies and laws of the Indian government and its exploitation of natural resources are operating against the laws of nature and self-sustained biodiversity thereby facilitating the multinational corporates that promote consumer culture that only benefit the human, (In the name of 'growth/development'), thereby exploiting our soil against the laws of nature without understanding the environmental aftermaths waging an 'indirect cold war' among nations.

In today's scenario, the need for active environmental soldiers who struggle for defending nature is greater than the need for environmental activists in this world. We believe in wielding ourselves with the weapons to battle the environmental war waged against Mother Nature. We chose love and knowledge, as our greatest weapons to save the environment.