நம் மண்ணின் அனைத்து இயற்கை வளங்களைக் காக்கவும், பல்லுயிர் நலனுக்காகவும், நீரின் இன்றியமையாமையையும் , சுற்றுச்சூழலையும் காப்பதற்கு முயற்சியாக உருவாக்கப்பட்ட பாசறையே
இந்த நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை
நம் கட்சி சார்பாக நிகழவிருக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் பயன்படுமாறு, சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக நாட்டு மர கன்றுகளை நாமே உருவாக்கும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க உள்ளோம்.
கடந்த காலங்களில் நாம் வெளியில் இருந்து மரக்கன்றுகளை வாங்க பல இன்னல்களை சந்தித்த காரணத்தாலும் மற்றும் நடப்படும் கன்றுகள் அனைத்தும் நாட்டு மர கன்றுகள் என்பதை உறுதி படுத்தப்படவும் இப்பணியை நாமே தொடங்கவிருக்கிறோம்.
ஊருக்கொரு காடு திட்டமும் பாரம்பரிய விதைகள் மீட்பு திட்டமும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
பல கோடி பனை திட்டம்
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 12000 பனைவிதைகள் நடவாது செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் கனவு திட்டமான பல கோடி பனை திட்டத்தினுன் கீழ் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்பத்து . இதில் திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி அணைத்து நிலை பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பெருவாரியான ஊராட்சிகளில் ஆணை விதை சேகரிப்பு மேற்கொண்டு பனைத்திருவிழா அன்று திருத்துறைப்பூண்டி , முத்துப்பேட்டை மற்றும் கோட்டூர் ஊராட்சி பகுதிகளில் அதிகமாக பனை விதை விதைக்கப்பட்டது
விதைப் பண்ணை திட்டம்
நம் கட்சி சார்பாக நிகழவிருக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் பயன்படுமாறு, சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக நாட்டு மர கன்றுகளை நாமே உருவாக்கும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க உள்ளோம்.
கடந்த காலங்களில் நாம் வெளியில் இருந்து மரக்கன்றுகளை வாங்க பல இன்னல்களை சந்தித்த காரணத்தாலும் மற்றும் நடப்படும் கன்றுகள் அனைத்தும் நாட்டு மர கன்றுகள் என்பதை உறுதி படுத்தப்படவும் இப்பணியை நாமே தொடங்கவிருக்கிறோம்.
மறை நீர் கொள்கை
தாமிரபரணி, கங்கைகொண்டான், திருச்சி உறையூர், திருமழிசை, மதுரை வைகை ஆறு, சிவகங்கை, பெருந்துறை, திருவள்ளூர் அரண்வாயல், செங்கல்பட்டு, தண்டலம் கூட்டுச்சாலை, படப்பை உள்ளிட்ட பல இடங்களில் இருக்கும் தனியார் குளிர்பானம் மற்றும் மதுபான நிறுவனங்கள் அனைத்தும் தடை செய்யப்படும். அரசு அவர்களோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தங்கள் நீக்கப்படும். இதன் மூலம் மண்ணின் நீர்வளம் காக்கப்படும்.
இந்த மண்ணை, இயற்கை வளத்தை, நீர் வளத்தை அடுத்த தலைமுறைக்கு அப்படியே பாதுகாத்து வழங்கிட வேண்டியது நம் கடமை. நமது நீர்வளத்தைச் சேமித்துப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழகத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும். பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நீர் வளத்தினைப் பாதுகாக்கப் புதிய கொள்கை மறை நீர்ப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும்.
தண்ணீரின் தேவையில் தன்னிறைவு அடைவோம்! – சீமான்
தூய்மை தாயகம்
சென்னை மாநகரின் உச்சகட்ட வேகத்தில் வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்று தான் வேளச்சேரி. வலசை பறவைகள் வந்து போகுமிடமாதலால் வலசை ஏரியாக இருந்த இடம் காலப்போக்கில் வேளச்சேரியாகிப் போனது. அந்தப் பகுதியின் நீராதாரமாக விளங்கும் இந்த ஏரி நகரமயமாக்கலின் நன்மைகளைக் கடந்து தவிர்க்க முடியா தீமைகளையும் சுமந்து கொண்டு நிற்கிறது. கடந்த ஆண்டுகளில் ஆண்ட/ஆளும் அரசுகளின் அலட்சியப்பாங்கினால் சுமார் 265 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏரி வெறும் 50 ஏக்கராக சுருங்கிப்போனது.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, வேளச்சேரி சட்டமன்ற தொகுதியுடன் இணைந்து இந்த ஏரியின் நீட்சி புனரமைப்பு திட்டத்துடன் களத்தில் இறங்கியது. அரசின் எந்தவித உதவியுமின்றி தன் சொந்த செலவில் இதை மேற்கொண்டது சுற்றுச்சூழல் பாசறை. சுமார் 100 முதல் 150 நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு புனரமைப்பு பணியில் ஈடுபட்டனர். நீட்சியில் பெருமளவில் இருந்த நெகிழிக்குப்பைகள், மரக்கழிவுகள், மது புட்டிகள் போன்ற பல வகை குப்பைகள் கைகளாலும், ஜேசிபி உதவியுடனும் அகற்றப்பட்டது. மேலும் அந்த பகுதியில் படர்ந்திருந்த ஆகாய தாமரைகள் நீக்கப்பட்டு நீர்ப்பாதை தூர்வாரப்பட்டது.
இயற்கையை காக்க வழக்காடல்
இயற்கைகெதிராக இயக்கப்பெற்ற இந்திய அரசின் அரசியல் சட்டங்களையும், அதனை பயன்படுத்தி இயற்கை வளக்கொள்ளையையும், இயற்கை நியதிகளுக்கு எதிராக விளங்கும் திட்டங்களும், வளர்ச்சி என்ற பெயரில் நம் மண்ணின் மீது நடத்துவது சூழலியலுக்கெதிரான மறைமுக பனிப்போர்.
ஆதலால் சுற்றுச்சூழல் பாசறை வாயிலாக, மக்களுக்கு எதிராகவும் இயற்க்கைக்கு எதிராகவும் திணிக்கப்படும் திட்டங்களுக்கு எதிராக வழக்காடப்பட்டு வருகிறது.
சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல்
சீமைக்கருவேலமரம் 12 மீட்டர் வரை வளரக்கூடியது . இதன் வேர் நிலத்தில் ஆழச்சென்று நிலத்தடி நீரை உறிஞ்சி வேளாண்மைக்கும், விவசாயத்திற்கும் தீங்கை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நிலத்தடி நீர் இல்லாவிட்டால், அது சுற்றுப்புறங்களிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சத் தொடங்குகிறது. இது நிலத்தடி நீரை விஷமாகவும் மாற்றும். இதன் வேர் (53 மீட்டர் ) 175 அடி வளரக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக வறட்சிக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று உறுதியாக கூறமுடியும். அதனால்தான் இந்த சீமை கருவேல மரங்கள் வளர்ந்து பெருகி வருவதை ஒரு போர்க்கால அவசரநிலை என்று கருதி நாம் வேரறுக்க வேண்டும்.
படத்தொகுப்பு
எங்களின் சமூக பணிகளின் பொழுது நாங்கள் எடுத்த சில புகைப்படங்களை இங்கு பகிர்ந்துள்ளோம்
நீங்களும் வனம் செய்வோம் குழுவுடன் இணைந்து பணியாற்றலாம்
தன்னார்வத் தொண்டர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற அழைக்கப்படுகின்றனர்